Friday 3rd of May 2024 03:36:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.பி.எல். 2021 - போட்டி ஏலப் பட்டியலில்  யாழ்.வீரர் வியாஸ்காந்!

ஐ.பி.எல். 2021 - போட்டி ஏலப் பட்டியலில் யாழ்.வீரர் வியாஸ்காந்!


ஐ.பி.எல் . 2021 -ஆம் ஆண்டுக்காக வீரர்களின் ஏலப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த இளம் கிறிக்கெட் வீரர் விஜயகாந் வியாஸ்காந்தும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஏலப் பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்ட 9 இலங்கை வீரர்களில் ஒருவராக வியாஸ்காந்த பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த ஏலப்பட்டியலில் 50 இலட்சம் அடிப்படை விலை நிர்ணயத்தில் தசுன் சானக்க, இசுறு உதான, வனிந்து ஹசரங்க டி சில்வா, குசல் பெரேரா, திசார பெரோரா, துஷ்மந்த சமீரா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

20 இலட்சம் அடிப்படை விலை நிர்ணயத்தில் விஜயகாந் வியாஸ்காந், கெவின் கொத்திக்கொட, மகேஷ் தீக்சன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

ஐ.பி.எல். ஏலத்துக்கு இவ்வாண்டு 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்திருந்தபோதும் அவர்களில் 9 பேரே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல் . 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,114 கிரிக்கெட் வீரர்கள் ஆரம்பத்தில் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். ஏலத்துக்கு தகுதி பெய்ய வீரர்களின் இறுதிப் பட்டியலில் மொத்த 292 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராகவே வியாஜ்காந் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெறும் விவோ ஐ.பி.எல் . -2021 வீரர்களுக்கான ஏலத்தில் மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் உள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE